இப்படி இருந்தால் எப்படி
பௌர்ணமி நிலவும்
உன் நிறத்தை கண்டு
கொஞ்சம்
பொறாமை கொண்டதடி...🌝
நீ தொட்ட தூரிகை எல்லாம்
உன் ஆறாம் விரலாய் மாற
இறைவனிடம் வேண்டுமடி...🖌
மருதாணியும் உன்னை
மகிழ்விக்க அதன்
உதிரத்தை சிந்துமடி...😍
உன் தோள் பையும்
உன்னிடம் தோழியாக
தொல்லை செய்யுமே....👜
உன் கைகுட்டைகள் எல்லாம்
கைகட்டி நிற்குமே
உன் கை கூட்டிற்குள் செல்ல...❣
நீ அணியும் கண்ணாடியும்
கண்ணடிக்குமே
உன் கண்களை கண்டு..👀
நீ ரசிக்கும் ரோஜா மொட்டும்
பூத்திடுமே உன்னை காண..🌹
நீ பூந்தோட்டம் சென்றால்
பூக்களும் பூங்கொத்து ஆகுமே
உன்னிடம் அதன் காதல் சொல்ல...
புகைப்படம் கூட புன்னகைக்கும்
உனது புன்னகையை கண்டு...😍
ஸ்கூட்டிகள் எல்லாம் ஸ்டைலாக ஸ்டாண்டில் நிற்கும்
உன்னை சைட் அடிப்பதற்காக...😜
உன் காலணியெல்லாம்
காலம் முழுதும்
உன் காலடியில் அகபட ஆசை கொள்ளுமடி...👠
இப்படி இருந்தால்
எப்படி பெண்ணே
கட்டுப்படுத்துவது
என் வார்த்தைகளை
உன்னை வர்ணிக்காமல்...😍