நீயும் நானும்

கண்ணாய் நீயும் உன்னுள்ளே கண்முழியாய் நானும் கலந்திருப்போம்
சிப்பியாய் நானும் அதனுள்ளிருக்கும் முத்தாய் நானும் மூழ்கியிருப்போம்
மண்ணாய் நீயும் உன்மடியிலே விழும் மழைத்துளியாய் நானும் மறைந்து கொள்வோம்
உடலாய் நீயும் உயிராய் நானும் உறவாடிக்கொள்வோம்
மேல் உதடாய் நீயும் கீழ் உதடாய் நானும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்வோம்
வானமாய் நீயும் உன்னோடு செல்லும் மேகமாய் நானும் பயணத்துக்கொண்டேயிருப்போம்
இதயமாய் நீயும் அதன் துடிப்பாய் நானும் எப்பொழுதும் இணைத்தே வாழ்வோம்!!!

எழுதியவர் : M Chermalatha (21-Sep-18, 6:55 pm)
சேர்த்தது : M Chermalatha
Tanglish : neeyum naanum
பார்வை : 663

மேலே