மீண்டும் ஒரு காதல்

மீண்டும் ஒரு காதல்
_______________________
இரவை தேடி
நிலவு வராமல் போனதுன்டா,
கரையை தேடாமல்
அலைகள் ஓய்ந்ததுன்டா ,
பூக்களை சுவாசிக்காமல்
வண்டுகள் உயிர்
வாழ்கின்றதா ,
மண்ணை சேராமல்
மழை துளிகள் வானத்தில்
மிதந்த துன்டா,
விடியலை கானாமல்
இரவுகள் உறங்கியதுண்டா.
காதலியே ... !
அப்படி தான்
நீயும் , நானும்
மேகமாய் ஒடாதே
மெல்லிசையாய்
என்னுள் கலந்திடு
உன் மெளனங்களை
நேசிக்கிறேன்
காரணம் அதில் கூட
ஒரு காதல் பாஷை கேட்கிறது
என் செவிகளுக்கு .
என் முதல் காதல்
நீயா என்று தெரியவில்லை !
சில சமயம் உணர்கிறேன்
நீ என் மீதும் ,
நான் உன் மீதும் கொண்டது தான்
"காதலென்று" .
கடந்து போனதெல்லாம்
வெறும் காணலென்று.
மீண்டும்
பிறக்க ஆசை படுகிறேன்
உனக்குள் ,"உனக்காகவே"
சில ஆயிரம் ஆண்டுகள்
வாழ ஆசை படுகிறேன்
"உன்னோடும் ", உன் காதலோடும்.
என்னவளே...
ஒரு சத்தியம் செய்து கொடு
இனி
என் முதலும் ,
முடிவும் நீயனவே.
கிழிந்து போன என் இதயத்தை
இப்போது தான்
உன் வார்த்தைகளால்
நெய்து கொண்டிருக்கிறேன்,
மீண்டும்
நீயும் கிழிக்க ஆசைப்பட்டால்
பெண்ணே கிழித்து விடாதே.
எரித்து விடு.
நீயும் நானும் கொண்ட
இந்த பந்தம்
சாகும் வரை தொடர வேண்டும் ,
நீயின்றி என் வாழ்க்கை
தொடருமானால்
மரணம் என்னை தொட வேண்டும் .
விட்டு போகாதே
போனால் என்னுயிர் போய் விடும்
போனால் உனக்காக போகட்டும்
உன் மடி மீது ஒரிடம் கொடு.
காதலுக்கும் கண்ணீருக்கும்
அவ்வளவு தூரமில்லை .
எனக்கு காதல் மட்டும் போதும்
நீ தானே என் காதல்
எனக்கு நீ மட்டும் போதும் .
Poem by
"Enoch Nechum .A "