முதல் தாய்மொழி மூவாத முத்தமிழ் - அமிசதொனி
மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய 'இசைத் தமிழ்க் கலம்பகம்' என்ற நூலிலிருந்து 'முதல்தாய்மொழி மூவாத முத்தமிழ்' என்ற 'அமிசதொனி' ராகப் பாடலைத் தருகிறேன்.
'ரகுநாயக' என்ற மெட்டு - தாளம் - முன்னை
பல்லவி:
.
முதல்தாய்மொழி மூவாத முத்தமிழ்
பேதைத்தமிழரால் பிறங்கா* தமிழ்
துணை பல்லவி:
முதுநாள் நிலத்தென் முனையேநிகழ்
முதன் மாந்தர் வாயின் முளையா முகிழ் (முதல்)
சரணம்:
வடுகாய் முன்தோன்றி வடநாவலே
வளராரியத்தின் கிளைகள்பின் பல்கிக்
குடமேற் பலகுடும் பாகிய
கோலங் கொண்டபின்னும் குமரியா மன்னும் (முதல்)
- மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்