லஞ்சம்
லஞ்சம்
வஞ்சம் லஞ்சம் எங்கும் தஞ்சம் !
வாய்மை என்பது எங்கே தங்கும்?
நிலையை எண்ணி¢ட வெடிக்கும் நெஞ்சம் !
அஞ்சி அஞ்சியே அழிந்தது போதும் !
மிஞ்சினால்தான் மீளும் நாடு!
கொஞ்சம் கொஞ்சமாய் நாளும் கொல்லும்
கொடிய நோயினும் கொடியது லஞ்சம் !
நஞ்சை உண்டிட நாட்டவர் துணிவரோ?
வெஞ்சிறை யிலே வீணரைத் தள்ளுவோம்!