உள்ளத்தை சொல்லடி

சின்னக்கிளியே என் செல்லக்கிளியே!
முன்னப் பின்ன நீயழுது பார்க்கலையே!
வண்ணக்கிளியே என் சுவாசக்கிளியே!
இன்னைக்கேனோ இப்படியொரு சோகம் கிளியே?

அதுதானே எம்மனசுக்கு தெரியலையே!
பொண்ணு பார்த்து போனாங்களே பக்கத்தூரு!
அப்பயிருந்தே மனம்முழுதும் சுமையாச்சு!
ஏனோ காரணம் புரியாம ரணமாச்சு!

ஓகோ அப்படியாடி பச்சைக்கிளியே!
உம்மனசுக்குள்ள இருப்பதாருனு சொல்லடி வெளியே
வேறொருவர் வாழும்போது இதயத்துல‌
புதுசா ஒருவர் எப்படியடி குடிவருவார்?

இப்பத்தான் புரிஞ்சது என்னாச மச்சான்!
எப்போதோ எம்மனச கொள்ளை அடித்தாய்!
அப்பயிருந்து உனக்கெனவே நான் வாழுறேன்!
அத இப்பவே ஊருக்குப் பறைசாற்றுறேன்..!

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (23-Sep-18, 4:19 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 98

மேலே