காந்தியம் சாத்தியமே

தடியேந்தி தைரிய நடை போட்ட
தலைவரின் சத்திய வாக்காம்
இந்த காந்தியம்!
போரோங்கும் இடமெல்லாம் அமைதிக்கோல் ஊன்றும்
சர்ச்சை சேரும் நேரமெல்லாம் சாந்தம் போற்றும்
நேர்நெறியிலே நல்வெற்றி அடையும்
அழித்து எரிந்தாலும் அறத்தின் வழி மீண்டும் முளைக்கும்!!
அன்று,
வெள்ளையனை வெளியேற்றவும்
விடுதலைப் பதக்கம் வென்றிடவும்
வெகுண்டெழுந்தது இந்த வேதம்!!
இன்று,
சாதியம் போக்கவும், சத்தியம் காக்கவும்
ஒற்றுமை உயரவும், உலகமது செழிக்கவும்
பூத்துக் குலுங்குகிறது இந்த புனிதம்!!
அக்காலமோ இக்காலமோ
எக்காலமும் தீவினைகள் எதிர்க்க
திருச்சோதியாய் திகழும் மறைவாக்காம்
காந்தியம் என்றும் சாத்தியமே!!!

எழுதியவர் : சக்தி பவானி. கி.சு (24-Sep-18, 8:21 pm)
சேர்த்தது : SAKTHI
பார்வை : 57

மேலே