எறும்பும் நானும்

வணக்கம் நண்பர்களே:
ஒருநாள் எறும்புகள் வரிசையாக செல்லும் அழகை ரசித்துக்கொண்டு இருந்தேன். எறும்புகள் நம்மோடு உரையாடினால் எப்படி இருக்கும் ஒரு சிறு கவிதை.

நான் : எறும்புகளே உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும் கொஞ்சம் நின்று
என்னை கவனியுங்கேளேன்...

எறும்பு : உங்களை போன்று எனக்கும் வேலை இல்லை என்று நினைத்தாய
முடிந்தால் என்வேகத்திர்க்கு நடந்துகொண்டே பேசுங்கள்.

நான் : சரி கலியுகத்தில் தானே நீயும் வாழ்கின்றாய் அதனால்தான் உனக்கும்
பிறரை மதிக்க தெரியவில்லை. சரி நான் உன்னை மதித்து உன்னிடம்
எனது கேள்வியை கேட்கின்றேன்.

எறும்பு : கலியுகத்தில் வாழ்ந்தாலும் மனிதரைபோல் மனம் இல்லாதவர்கள்
இல்லை நாங்கள்.கேளுங்கள் நான் நின்று பதில் கூறுகின்றேன்.

நான் : சரி எப்பொழுதும் துறுதுறுவென இருக்கின்றாயே உனக்கு ஓய்வு
கிடையாதா?

எறும்பு : எனக்கு உழைப்புதான் ஓய்வைப்போன்றது. உழைக்கும் காலத்தில் நான்
ஓய்வை விரும்புவதில்லை மனிதனைப்போல்.

நான் : சரி நீ சேகரிக்கும் உணவுகள் முளைத்து விடாத?

எறும்பு : இல்லை நாங்கள் மனிதனைப்போல் இந்த பொருளற்ற வாழ்விற்காக
பொருள் தேடி அலையமட்டோம். நாங்கள் உணவுகளை மட்டுமே
சேகரிப்போம் அப்படி சேகரிக்கும் உணவுகளுக்கும் கருத்தடை
செய்துவிடுவோம்.

நான் : நானும் முதலில் இருந்து கவனிக்கின்றேன் ஏன் மனிதர்களை மட்டும்
குறை கூறிக்கொண்டே இருக்கின்றாய் நாங்களும் உழைப்பவர்கள்தான்.

எறும்பு : எறும்பு என்னைப்பார்த்து நக்கலாக அப்படியா சரி என்றது.

நான் : சரி நீ மனிதகுலத்துக்கு எதாவது சொல்ல விரும்புகின்றாயா?

எறும்பு : என்னையும் மதித்து என்னிடம் கேட்டதுக்கு நன்றி. எறும்பாய் பிறந்த
எனக்கே உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும். வெயில்
காலம் தவிர மற்ற நேரங்களில் என் குடும்பம் மற்றும்
உறவினர்களோடுதான் எனது நேரத்தை செலவிடுவேன். ஆனால்
என்னை உழைப்பிற்கு உதாரணமாக எடுத்துக்கொண்டு எந்திர வாழ்க்கை
வாழ்வதை நினைத்து மனம் மிகவும் வேதனையாக உள்ளது.
மனிதர்களே உழையுங்கள் ஆனால் உழைப்பை விட உறவுகளே
சிறந்தது. அதை மறக்க வேண்டாம்.......
நன்றி!

எழுதியவர் : சிந்தனை சிற்பி ராஜலட்சும (25-Sep-18, 8:49 pm)
சேர்த்தது : Rajalakshmi
Tanglish : yerumbum naanum
பார்வை : 108

மேலே