நானும் கவிதை எழுதுகிறேன்

நானொரு சாதாரண மனிதன், நானும் கவிதை எழுதுகிறேன்.
நானொரு கண்மருத்துவன்,என்றும் கவிஞர் கண்ணதாசன் இல்லை;
தனித்த அறையி லமர்ந்து சிந்திக்க யெனக்கு நேரமில்லை,
என்றன் சிந்தனைகள் சிறகடித்து என்றுமே மேலே பறக்கலையே; 1

நானொரு சாதாரண மனிதன், நானும் கவிதை எழுதுகிறேன்;
விடுதி அறையில் தங்கி விருப்பமான கவிதை எழுதவில்லை;
மதுபானம் அருந்த வில்லை, மப்பில் கவிதை எழுதவில்லை;
என்றன் சிந்தனைகள் சிறகடித்து என்றுமே மேலே பறக்கலையே; 2

நானொரு சாதாரண மனிதன், நானும் கவிதை எழுதுகிறேன்;
காதல் கவிதை எழுதுகிறேன், வாழ்க்கைக் கவிதை எழுதுகிறேன்;
நண்பர்கள் கவிதை எழுதுகிறேன், பிறபல கவிதை எழுதுகிறேன்;
என்றன் சிந்தனைகள் சிறகடித்து என்றுமே மேலே பறக்கலையே; 3

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Sep-18, 9:32 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 192

மேலே