எந்தன் தமிழே
மூச்சுவிடும் வேளையிலும்
உன்னை முத்தமிட மறப்பேனோ?!
வானை நோக்கி வளர்ச்சி அடைந்தாலும்
உன்னை வர்ணிக்காமல் இருப்பேனோ?!
தலைச் சாய்ந்து உறங்கினாலும்
உன்னை நினைக்காமல் விழிதான் உறங்கிடுமோ?!
கவலைகள் கண்ணோரம் கசிந்தாலும்
உன்னை எண்ணாமல் என் மனம் ஒரு நாளைத்தான் கடந்திடுமோ?!
எந்தன் உயிருக்குக்குயிராய் ஆனவளே?!
எந்தன் தமிழ் அன்னையே!
உந்தன் புகழ்ப்பாட ஒரு யுகம் போதாது?!
உலகம் முழுவதும் உந்தன் சிறப்பு!
அது தமிழ்மொழிக்கே கிடைத்த தனிச்சிறப்பு!