காதல் பைங்கிளி
இதழ் சேலத்தின்
செம் மாங்கனியோ
விழி பாணத்தில்
நெஞ்சுடைக்கும்
பெண் பூங்கொடியோ
முகம் வானத்தில்
ஒளிரும் சந்திரனோ
உடல் கானகத்தில்
நறுமணம் வீசும்
மலர்த் தோட்டமோ
குரல் கானத்தில்
இனிக்கும் குயில் ராகமோ
அழகுப் பேடை மேல்
சேவலுக்கு வந்ததென்ன
காதல் மோகமோ
அஷ்ரப் அலி