படித்ததில் பிடித்தது

ஏதோ ஒரு வார இதழில் படித்ததாக என்னுடைய ஞாபகம் . என்னுடைய மனம் கவர்ந்த உண்மை சம்பவங்களில் ஒன்று அதனை இத்தளத்தில் பதிவிட விரும்புகிறேன். இரு நண்பர்கள் பேசி கொண்டு நடந்து செல்கின்றனர். திடீரென்று அந்த நண்பர்களில் ஒருவர் இந்த வழியாக போக வேண்டாம் மாற்று வழியில் செல்லலாம் என்று கூறுகிறார், அதற்கு அடுத்த நண்பர் ஏன் இந்த வழியாக சென்றால் என்ன இதுதானே வீட்டிற்கு செல்வதற்கு சுலபமான வழி என்று சொல்கிறார். அதற்கு அடுத்த நண்பர் வேண்டாம் என்று சொல்கிறார். ஏன் என்று அடுத்த நண்பர் வற்புறுத்தி கேட்கவும் அந்த நண்பர் எல்லாம் கடன் பிரச்சினைதான் என்று சொல்கிறார். கடன் பிரச்சினையா எவ்வளவு கடன் வாங்கி வச்சிருக்கே அப்படி கடன் வாங்குற அளவுக்கு உனக்கு என்ன கஷ்டம் வந்தது என்று கேட்கவும் நம் நண்பர் சொல்கிறார் நான் கடன் வாங்கவில்லை கடன் கொடுத்திருக்கிறேன் என்று , அடுத்த நண்பருக்கு ஒன்றுமே புரியவில்லை என்ன குழப்புறே என்று கேட்கவும் நம் நண்பர் சொல்கிறார் ஒன்றுமில்லை இந்த தெருவில் வசிக்கும் ஒரு முதியவர் என்னிடம் சிறிய கடன் வாங்கி இருக்கிறார். அவர் மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறார் அதனால் அந்த கடனை திருப்பி தர முடியவில்லை. அதை நான் பெரிதாக எடுத்து கொள்ள வில்லை இருந்தாலும் நான் அந்த வழியாக செல்லும்போது அவர் என்னை பார்த்தால் கடனை கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்படுவார் எனக்கும் அது வருத்தத்தை அளிக்கும் அதனால் தான் நான் மாற்று பாதையில் செல்லலாம் என்று சொல்கிறேன் என்று கூறினார். இப்படிப்பட்ட மனிதர்களும் நம் நாட்டில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் .

எழுதியவர் : (29-Sep-18, 8:05 pm)
சேர்த்தது : Sundarivenkat
பார்வை : 316

மேலே