களக்குடி

களக்குடி என்பது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு 78% பெண்களும், 67% ஆண்களும் வசித்து வருகின்றனர். இங்கு எங்கும் காணாத அளவிற்கு ஆலயங்களும், அதை ஒற்றுமையுடனும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஊர் : களக்குடி அஞ்சல் : திரு உத்திரகோசமங்கை

பஞ்சாயத்து : மல்லல் ஒன்றியம் : திருப்புலாணி

வட்டம் : கீழாக்கரை மாவட்டம் : இராமநாதபுரம்

மாநிலம் : தமிழ் நாடு அஞ்சல் குறியிட்டு என் : 623 533

கல்வியறிவு

v ஆண்கள் 53%
v பெண்கள் 47% இவ்வூரில் கல்வி அறிவு சற்று அதிகமாகவே குறைவு. கடந்த 2010ல் இருந்து சற்று கொஞ்சம் பேர் டாக்டர், எஞ்சினியர், டீச்சர், நர்ஸ், போலீஸ், ஆர்மி போன்ற வேளைகளில் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.


மக்கள் வகைபாடு

1. தேவேந்திரகுல வேளாளர்கள் (60%)
2. யாதவர் குலம் (40%)


தொழில்

1. விவசாயம் (88%)
2. ஆடு மேய்த்தல் (20%)
3. அரசு சார்ந்த வேலைகள் (40%)


மரங்கள்

1. கருவேல் மரம்
2. புளிய மரம்
3. வேப்பமரம்
4. யூகலிப்டஸ் மரம் (ஆரஸ்வதி மரம்)
5. ருத்திராட்சை மரம் (நைனார் கோவிலின் சன்னதி முன்பாக உள்ளது )
6. மற்றும் சில




திருத்தலங்கள்

1. ஸ்ரீ முனியசுவாமி ஆலயம்
2. ஸ்ரீ ஒமாட்சி காளியம்மன் ஆலயம்
3. ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம்
4. ஸ்ரீ பாலகணபதி ஆலயம்
5. ஸ்ரீ அய்யனார் ஆலயம்
6. ஸ்ரீ கண்ணன் ஆலயம்
7. ஸ்ரீ மகாலெட்சுமி ஆலயம்
8. ஸ்ரீ நைனார் ஆலயம்
9. ஸ்ரீ வீரன் ஆலயம்
கல்வி நிலையங்கள் :

1. தமிழ் நாடு அரசு அங்கன் வாடி
2. ஸ்ரீ சேதுமாணிக்கம் உயர்நிலைப்பள்ளி
நீர் நிலைகள்

1. வைகை ஆற்று கிளை
2. களக்குடி கண்மாய் 3km பரப்பளவு
3. ஊருணி
4. நல்லதண்ணி ஊருணி
5. உப்புத்தண்ணி ஊருணி
6. கிணறுகள்
7. ஒமாட்சி கண்மாய்
சிறப்பான விழாக்கள்

1. இந்திர விழா
2. கிருஷ்ண ஜெயந்தி
3. பொங்கல் விழா
4. மாட்டு பொங்கல்
5. ஆடி திருவிழா
6. ஆவணி திருவிழா
7. கார்த்திகை தீபம்
8. தீபாவளி


இந்திர விழா

இந்திர விழா என்பது இங்கு தேவேந்திரகுல வேளாளர் மக்களால் கொண்டாடப்படுகிறது, தனது விவசாயம் செழித்து ஓங்கவும் நல்ல மழை பொழியவும் பசிப்பிணி நீங்கவும் கொண்டடபடுகிறது. இவ்விழாவின் போது பெண்களும் ஆண்களும் பெருமித மகிழ்ச்சியுடன் ஆடிபாடி வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.



கிருஷ்ணஜெயந்தி

இவ்விழாவானது யாதவர்குல மக்களால் கொண்டாப்படுகிறது, இவ்விழாவின் போது அம்மக்கள் விரதம் இருந்தும், கண்ணன் வேடம் அணிவித்தும், அந்த கண்ணன் உரி அடிப்பதை பார்த்தும் மகிச்சியாக கொண்டாடி மகிழ்கின்றனர். இவ்விழாவின் போது இம்மக்கள் தனது முறை உறவின் மீது மையை அடித்தும் கலர் பொடிகளை தூவியும் தனது மகிழ்ச்சியை வெளிபடுத்துவார்கள்.



ஸ்ரீ ஒமாட்சி காளியம்மன் ஆலயம்



ஸ்ரீ ஒமாட்சி காளியம்மன் ஒருபெண் காவல் தெய்வம் ஆகும். இக்காளியம்மனுக்கு மற்றொரு பெயரும் உண்டு, காளியாத்தால் என்பது ஆகும். இக்காளியம்மனுக்கு 16 குழந்தைகள் ஆகும், இக்காளியம்மனின் சிறப்பு என்னவென்றால், எங்கும் காணாத சிற்ப கலைகளுடன் தோற்றம் இருக்கும். அது மற்றும் இன்றி குழந்தைகள் இல்லாதவர்க்கு இக்கோவிலில் வேண்டி தொட்டில் கட்டி, வெள்ளி, செவ்வாய் விளக்கு ஏற்றி வைத்தால், தன் வேண்டுதல் நிறைவேறும் என்றும், வேண்டி ஒரே வருடத்தில் குழந்தை பிறக்கும் என்று மக்களால் இன்றுவரை நம்பப்பட்டு வருகின்றது. இக்காளியம்மனுக்கு மக்களால் வேல்,பால்குடம் , 21 தீச்சட்டி எடுத்தல் போன்று ஆடி கடைசி வெள்ளி கிழமை கொண்டாடி மகிழ்வதோடு மட்டும் இல்லாமல் அன்னதானம் அளித்தும் மற்றும் அன்று ஒருவரின் உடம்பில் அருள் ஏற்றி குறிசொல்லும் பழக்கமும் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இக்காளியம்மனை சுற்றி கருவேல் மரங்கள் நிறைந்தும் ஆற்று படுகையின் நடுவிலும் அமைந்து உள்ளது. இக்கோவிலை பராமரிப்பவர்கள் களக்குடி தேவேந்திரகுல வேளாளர் பொது மக்கள், ஆனால் தற்போது சிலர் இக்கோவிலின் உரிமையாளர்கள் தங்களின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது, தற்போது பூச்சி, சித்திர சாத்தி வம்சாவளிகள் கொண்டாடுவதாக சிலர் கூறப்படுகின்றனர்.



ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம்

காமாட்சியம்மன் ஆலயம் களக்குடியில் அமைந்துள்ளது, இக்கோவிலில் விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டு வந்தால் அம்மை நோய் மற்றும் தீராத நோய்களும் நீங்கிவிடும் என்று மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இவ்அம்மனுக்கு ஆடிமாதம் பொங்கல் வைத்து விழா கோல காலமாக கொண்டாடப்படும், இக்கோவிலில் அம்மன் கூழு மிகவும் பிரசித்த பெற்ற ஒன்றாகும், இக்கூளை பருக அணைத்து சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் வருவார்கள், இக்கோவிலை பராமரிப்பவர்கள் திருமதி பார்வதி குடும்பத்தை சார்ந்தவர்கள்.



ஸ்ரீ முனியப்பா சுவாமி ஆலயம்

இக்கோவில், ஒரு காவல் தெய்வமாகும், இக்கோவிலை பராமரிப்பவர்கள் களக்குடி தேவேந்திரகுல வேளாளர் பொதுமக்கள் ஆவார், இக்கோவிலின் விழாவானது இரவில் கொண்டாடப்படும். இந்த ஆலயத்தில், மாட்டு தோளால் செய்த மேளம் பயன் படுத்துவது தடை செய்யப்பட்டு உள்ளது. இக்கோவிலில் அருள் ஏற்றி ஆணி செருப்பு அணிந்துகொண்டு குறி சொல்லும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகின்றது. அது மாற்றும் இன்றி இவ்விழாவின் போது வீடு வாரியாக (அதாவது வரி வாரியாக) படையல் ஆட்டு கரி வழங்கும் பழக்கமும் இருந்து வருகின்றனது இவ்விழாவில் யாதவர் குல மக்களும் கலந்து கொள்ளுவார்கள் என்பது குறிப்பிட தக்கது.



ஸ்ரீ கண்ணன் ஆலயம்

இக்கோவிலில் யாதவர் குல மக்களால் பராமரித்து விழாக்கள் கொண்டாப்படுகிறது, இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி மிகவும் பிரசித்தமாக இருக்கும். இதை காண சொந்த பந்தம் என்று கூட்டம் அலைமோதும்.



ஸ்ரீ அய்யனார் ஆலயம்

இக்கோவில் ஊர் காவல் தெய்வமாக இருந்து வருகின்றது, இக்கோவிலை தேவேந்திரகுல வேளாளர் மக்களும் யாதவர் குலமக்களும் சேர்ந்து கொண்டாடி வருகின்றனர், இங்கு குதிரை எடுப்பு திருவிழா மிகவும் பிரசித்த பெற்ற ஒன்றாகும். ஆனால் சிறிது காலமாக குதிரை எடுப்பு திருவிழா கொண்டாடாமல், கோவிலை எந்த ஒரு கவனிப்பும் இல்லாமல் கோவில் பாழடைந்து உள்ளது. இக்கோவிலை பராமரிக்காமலும் எந்த ஒரு விழாக்களும் எடுக்காததால், தெய்வத்தின் கோவத்தினால் மழை பொழிய வில்லை என்று சில பெரியவர்கள் கூறுகின்றனர்.



ஸ்ரீ மகாலக்சுமி ஆலயம்

மகாலக்சுமி ஆலயம் தாராவதி வம்சத்தினர் பராமரித்து வருகின்றனர், இக்கோவிலில் ஆடிமாதம் பொங்கல் வைத்து கொண்டாடப்படுகிறது. இக்கோவிலில் ஆடி திருவிழா அன்று பாண்டி சாமி அருள் புரிந்து குறி சொல்லுவர் அது மற்றும் இன்றி ஆடி திருவிழா அன்று பேய் பிடித்தவர்க்கு பேயும் ஒட்டப்படும் என்று கூறப்படுகின்றது.



ஸ்ரீ வீரன் ஆலயம்

ஸ்ரீ வீரன் ஆலயம் களக்குடி வயல்வெளிகளிலும் வைகை கரையின் மீதும் அமைந்து உள்ளது. இக்கோவிழலை பராமரிப்பவர்கள் சண்முகவேல்குடும்பனார் வம்சாவழிகள் என்று கூறப்படுகிறது. இக்கோவிலில் தமிழர் திருநாளாம் தை பொங்கல் அன்று சண்முகவேல் குடும்பனார் வம்சாவளிகள் பொங்கல் வைத்து கொண்டடுவார்கள் என்று கூறப்படுகிறது.



ஸ்ரீ நைனார் ஆலயம்

இக்கோவில் வயல்களின் மத்தியில் அமைந்து உள்ளது. இக்கோவிலில் ருத்துராட்சை மரம் செழித்து புதர் செடி போல் ஓங்கி நிற்கிறது. இங்கு தேவேந்திரகுல மக்கள் அறுவடை செய்யும்போது முதலில் அறுக்கும் நெல்லை இக்கோயிலில் வைத்து தேங்காய் உடைத்து வணங்குவது வழக்கமாக இருந்து வருகின்றது.



ஸ்ரீ பாலகணபதி

ஸ்ரீ பாலகணபதி ஆலயம் ஊரின் குளத்தின் கறையில், அமைந்து உள்ளது. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று மிக சிறப்பாக கொடாடப்படும், அது மற்றும் இன்றி தை மாதம் முழுவதும் ஒலிபெருக்கி கட்டி காலையிலும் மாலையிலும் பொங்கல் வைத்து வணங்குவது வழக்கமாக இருந்து வருகின்றனது.



இவ்வூரின் பொழுது போக்கு

· கபாடி
· பாண்டியாட்டம்
· கண்ணாம் பூச்சி
· மட்டை பந்து
· மற்றும் சில
இவ்வூரில் கல்வி அறிவு சிலகாலமாக உயர்ந்துகொண்டு போகும் நிலையில் யாரும் நூலகம் பக்கம் போனது இல்லை ஒரு சிலரை தவிர, அவர்களின் பெயர்கள் பின் வருமாறு,

· தங்கபாண்டி
· செல்லபாண்டி
· வினோத் பாண்டி
· சண்முகநாதன்
· சந்தோஷ் குமார்
· குருமூர்த்தி
· முதீஸ்பிரியா
இந்த பெயர்கள் அனைத்தும் திரு உத்திரகோசமங்கை நூலகத்தில் பதிவு செயப்பட்டு உள்ளவை. இவர்களை வாழ்த்தும் நோக்கத்திற்காக மட்டும் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளோம்.

எழுதியவர் : மு.சண்முகநாதன் (2-Oct-18, 7:31 am)
சேர்த்தது : சண்முகநாதன்
பார்வை : 195

மேலே