சொற்கள் இல்லை உன்னை சொல்லி முடிக்க...
குற்றால மேகங்கள் கூடிப் பேசும் உன் கூந்தலில்...!
எப்படியடி இன்னும் தேயாமல் பிறை நிலவு உன் நெற்றியில்...!
அன்று ராமன் வளைத்த வில் இன்னும் நிமிராமல் உன் புருவங்களில்...!
பகலையும், இரவையும் கடந்த இன்னொரு பொழுது பாவை உன் பார்வைகளில்...!
எதுகை..மோனைகளை எப்படிப் போட...வண்ண இதழ்களை வர்ணிக்க நானும்...!
என்ன தவம் செய்ததென உன் முகத்தை தழுவ விட்டாய் சில கற்றை முடிகளை...?
சிமிழ்கள் சிதருதடி உன் சிணுங்கல்களில்...!
நின்றாலும் நடந்தாலும் இசைக்கின்ற கொலுசுகள்...!
உன் விரலில் இருப்பதனால் மோதிரத்திற்கும் மோட்சமடி...!
நீ கை அசைக்கும் போது வளையல்கள் கூட உன் கையை உரசி கவிதை சொல்லும்...!
உன் உள்ளங்கையில் குடியிருக்க வேண்டி கைரேகைகளுக்குள் கத்திச் சண்டை...!
மருதாணி தொட்டுவிட்டதால் உன் விரல்கள் கூட வெட்கப்பட்டு சிவக்கின்றது...!
உன் அரைத்தூக்க புலம்பல்கள் முன்னே என் கவிதை மொழிகள் எல்லாம் கால் தூசி... !
நீ சூடிய பூக்களுக்கு மட்டும் வடிய பின்னரும் வசந்த காலம் , என் புத்தக பக்கங்களில்...!
புடவையோ.., தாவணியோ..,புரிந்துகொள்ள முடியவில்லை...,
அதனால் உனக்கழகா...?
இல்லை உன்னால் அதற்க்கழகா...?
உன் கூந்தல் குடியேற மல்லிகையும் மன்றாடும்...,
மன்னித்து இடம் தந்தால் மறு நாளும் போராடும்...!
நீ அணியும் ஆடைகள் சொர்க்கம் போகும் ...,
அதற்காக பருத்திகளும் அவசரமாய் சாகும்...!
வஞ்சி உன்னை எழுதும் போது புரிகிறது..., வார்த்தைகளின் பஞ்சம்...!
செல்லரித்த இலக்கியங்கள் முழுதும் தேடிப்பார்த்தேன்...சொற்கள் இல்லை உன்னை சொல்லி முடிக்க...!
நீ கன்னி இனமா...? இல்லை கவிதை இனமா...?
வாடிப்போகிறேன்...,
விடை தேடிப்போகிறேன்...!