அவள் ஓர் புத்தம்புது பூந்தோட்டம்

புத்தம்புது மலர்தோட்டமடி நீ
அதில் பூத்துக்குலுங்கும்
வண்ண வண்ண வாசமிகு
நறு மலர்களல்லவோ உந்தன்
மேனியின் எழில்கள் ஒவ்வொன்றும்
மலர்களின் வாசம் வண்டெனை
இழுக்க இதோ நான் - தேன்
சிந்தும் மலர்கள் அல்லவோ
நான் காணும் இவை எல்லாம்-
எதை நாடுவது எதன் தேன்
சுகம் தரும் என்றெண்ணியபோது
என் கண்களுக்கு விருந்தாய்
தெரிந்தது உந்தன் செவ்விதழ்கள்
விரிந்த ஆம்பலாய் ஆங்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Oct-18, 9:12 am)
பார்வை : 67

மேலே