பொய் என்றால் என்ன
என் பிள்ளை என்னிடம்
கேட்ட ஒரு கேள்விக்கு
விடையறியா மந்தன் போல்
மாறி நான் நடந்திருந்தேன் . . .
அந்தக் கேள்விதனை
உனைப்பார்த்து நான் கேட்பேன்
உன் பிள்ளை உனைப்பார்த்து
உரைத்ததா என்று சொல் . . .
எந்தையே. . . !
பொய் என்றால் என்ன. . . ?
நீங்கள் பொய் (உரை) உரைத்ததுண்டா (டோ) . . . ?
பொய்யுரைக்க இயலாமல்
ஆமெனவும் முடியாமல்
வெயில்பட்ட (வெயிலிலிட்ட) மண்புழுவாய்
நாணிக் குணிகின்றேன் . . .
விதி நடத்தும் நாடகத்தில்
என் வித்தே எனது விடை
நானறியா பலவிடையை
கேள்வியாய் எனக்குரைத்து
என் வழியே உன்னை நீ
சிலையெனவே செதுக்கிட்டாய் . . .
நீ தொடுத்த கேள்விக்கு
இதுவே எனது விடை
ஆமென்றால் அவமானம்
இல்லையென்றால் அதுதான்
" பொய் "