விதி

#விதி #சொ.சாந்தி ..
வீசி எறியப்பட்ட காற்றில்
வீரியமற்று விழுந்தது
அந்த சிறிய ஓடையில்
சீக்காளி சிற்றெறும்பு...!
ஜீவன் தொலைத்த இலையொன்று
சருகாய் மிதந்துவர
எறும்பு எட்டிப் பிடித்து
இளைப்பாற நினைத்த தருணத்தில்தான்
எச்சமிட்டுச் சென்றது
ஏதுமறியாத பட்சி ஒன்று..!
நீருக்குள் மூழ்கி
மேலே மிதந்தபோது
அந்த சருகில்
எச்சமும் இல்லை
எறும்பும் இல்லை..!
காற்றிடமிருந்து தப்பிய எறும்பிற்கு
பட்சியின் எச்சதால் மரணம்
என்பது எழுதப்படாத விதி..!
#சொ.சாந்தி