ஒரு மல்லிகைபூச்சரம் பேசியது

என் வெண்மை என் வாசம்
என் அழகு தோற்றம் -உன்னை
என்னை நாட வைக்க நீ
என்னை பறித்து தொடுத்து
உன் கூந்தலில் வைக்கின்றாய்
இந்த என் மணமும் அழகும்
உன்னவனையும் மயக்க
அவன் வந்து உன்னை அள்ளி
அணைக்க, உன் கூந்தலை வருடி
அவன் கையில் நான், என்னை
முகர்ந்தான், வாசம் குறைந்தது
என் நிறம் வெண்மை இல்லை
, வெளிறியது, நான் வாடியவள்
என்னை இந்த மல்லிகைபூச்சரத்தை
அவன் வீசி எறிந்தான் , அவளும் கண்டுகொள்ள வில்லை
அவள், அந்த மலர் , அவன் அரவணைப்பில்
அவள் இன்னும் வாடவில்லையே !

இதோ நான், தரையில் , இன்னும்
தெருவில் போகிறவர் கால் என் மீது
நான் வாடிய மலர்

நேற்றைய வாசம்மிகு அவனும் மயங்கும்
மல்லிகை, மல்லிகைபூச்சரம் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Oct-18, 1:57 am)
பார்வை : 93

மேலே