காதல் கனிகள்

காதல் கனிகள்

அவன் வாலிபம் செடியாக வளர்ந்து,
அவன் ஆசை மொட்டாகி,
அவள் சிரிப்பில் பூ பூத்து,
அவள் விழி வண்டுகள் ரீங்காரம் இட,
அவள் மௌனம் காயாக காய்க்க,
இருவர் உள்ளம் காதல் கனியாய் இனித்திட,
கல்யாணத்தில் காதல் கனிகள் களித்திட,
இல்லறத்தில் கனிகள் வெம்பி வெதும்பிட,
இனித்த கனியும் புளித்தது,
காதல் திருமண வாழ்விலே.........

எழுதியவர் : கி. பார்த்தசாரதி (5-Oct-18, 1:45 am)
சேர்த்தது : பார்த்தசாரதி கி.
Tanglish : kaadhal kanikal
பார்வை : 2739

மேலே