பிரிவு
பிரிவு
நித்திரை கண்ணின்றி
சித்திரை நிலவொளியில்
காற்றில்லா இரவுதனை
நேற்றலோ கண்டேன் நான் . . .
உன் பிரிவால்,
பிரிவு என்றும் இருமுனைக்கூர்வாள்
நம்மில்,
எவர் முதலெடுப்பினும்
இருவரும் துடிப்போம்
ஒரு முழு நாளில்
இரு வேறு பிரிவானோம்
இயற்கையின் ஆணை(சை)ப்படி
இரவு பகலானோம் . . .
பூவுடன் சேர்ந்திட்டால்
நாறும் மணக்குமடா
பூவையை நீ பிரிந்திட்டால்
தேன் சுவை கசக்குமடா
போர்வையும் கணக்குதடா - உன்
பார்வையின் பிரிவினிலே
மெய் தீண்டியும் எரிக்குதடா - உன்
நூலிழைப் பிரிவினிலே
வண்டு துளைக்குதடா
குரு மூங்கில் என் நெஞ்சுக்குள்ளே
வந்து சேர்ந்திடு நீ தென்றல் போல் (லவே)
நான் இசைத்திட காத்திருப்பேன்