அவள்
அவள் சிரித்தாள்-அந்த
மாதுளைக் கன்னத்தாள்
முத்துப்பற்கள் தெரிய
வலது கன்னத்தில் அந்த
பேரழகு குழி ஒன்றும்
கூட தோன்ற -புவிக்குத்தான்
ஈர்ப்பு உண்டு மேலெறிந்து கல்
கீழே விழும்போது தெரிந்து கொண்டேன்
ஆனால் இந்த பெண்ணின்
கன்னக்குழி என்னை ஈர்த்துக்கொண்டதே
அவள் இதயத்தில் பூட்டி வைக்க
இது புரிந்தது எனக்கு
அவள் சிரித்த பின்னால்
அதில் நான் என்னை தேடியபோது
அந்த குழிக்குள் நான்.
அவள் கன்னக்குழி ஈர்ப்பில் !