புல் லின் புலம்பல்

" புல் " லின் புலம்பல்
***********************************
புல்லென்று எனைச் சொல்வார் மண்மேல் ! எப்பொருளால்
புல்லாய் உருவானேன் என்றறியேன் ! என்மேல்

சில்லென்ற காற்றலைந்தும் சீறிவிழும் மழைகனத்தும்
சுள்ளென்ற வெயில்வருத்தும் தண்ணென்று பனி அணைக்கும்

என்செய்வேன் ஏற்கத்தான் வேண்டும் எனது நிலை !
என்செய்து அதைமாற்ற எனக்காகும் சொல்வீரே

என்னுடலில் புழுவூர்ந்து மெல்லவரும் ; பூச்சியெனைத்
தின்னவரும் ; பொன்வண்டும் உண்ணவரும் என்செய்வேன் ?

நான்பிறந்து என்னபயன்? நானிருந்து என்னபயன் ?
மண்ணுக்குப் பாரமாய் இல்லாது மண்ணிலொரு

சின்னஉயிர் வாழ்வதற் காயினும் பயன்படுவேன்
என்றிருப்பின் அங்ஙனமே ஆகட்டும் என்பிறப்பு !

எழுதியவர் : சக்கரைவாசன் (5-Oct-18, 4:12 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 72

மேலே