நெஞ்சில் அமர்ந்தாள் நிலவு

பேடை அழகு மயில்
முகம் வட்ட நிலவு
கூடை மலராடை
அணிந்தாள் உடல்
வாடை யினால்
நெஞ்சம் கவர்ந்தாள்
சாடை விழியாலே
சாகசங்கள் புரிந்தாள்
கோடை வெயிலுக்கு
குளிர் சாமரம் வீசும்
வாடைக் காற்றாய்
வந்திங்கே அமர்ந்தாள்


அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (6-Oct-18, 11:38 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 134

மேலே