காதல் ஏமாற்றம்
இதயத்தின் இயக்கம் இங்கே ஏக்கமானது
இளமையின் தாபம் வெறுமையானது
உயிர் கொண்ட காதல் இங்கு மடமையென்றானது
பெண் கொண்ட பாசம் பொய்யென்றானது
கவலை தரும் கண்ணீர் மழைநீரெண்டானது
காத்திருந்த நாட்கள் எல்லாம் கானலானது
உலகிலே செல்வம் ஒன்றே முதன்மையானதே
ஏமாற்றம் ஒன்றே என் காதல் வாழ்வில் இறுதியானது....,