கழுகாய் எழுவாய் மனமே
உன் மனதில் எழும் ஆயிரம் கேள்விகள்
உன்னை மூழ்கடித்து போகும்
பரவிக்கிடக்கும் எண்ணங்களை
சீர்படுத்தி
கழுகாய் எழுவாய் மனமே
சுகமாகவே தொடரும் வாழ்வெல்லாம்
கண்கள் கடந்து வரும் கண்ணீர்
வழியே வந்து சேரும் வெற்றி
காலமெல்லாம் களங்கமின்றி வாழ செய்யும்
இன்றே
கழுகாய் எழுவாய் மனமே