தென்றலில் ஒரு புயல்

நண்பன் மாடசாமி...
பழகுவதில் எளிமையானவன்...
படிப்பதில் மிக வலிமையானவன்...
பாகுபாடின்றி நண்பர்களைக் கண்டால்
மனதாரப் புன்னகைப்பவன்...

இந்த கிராமத்துத் தென்றலுக்குள்
அமெரிக்கா சென்று
பணி புரியும் வீரியம் ஒன்று
புயலாய் ஒளிந்திருந்தது
அப்போது யாருக்கும் தெரியாது...

முப்பது ஆண்டுகளாய்
நண்பன் மாடசாமி அமெரிக்காவில்...
அமெரிக்கர்கள் இவன் பெயரை
வெவ்வேறு விதமாய் உச்சரித்தாலும்
இவன் பொறியியலில்
உச்சம் தொட்டவன் என
ஒரே விதமாய்ப் பாராட்டுவார்கள்...

பொறியியலில்
வசிரானி & ரத்வானி
எழுதிய புத்தகங்கள்
அத்தனையும் படித்திருப்பான்...

திரைப்படங்களில்
கமல் & ரஜினி
நடித்த படங்கள்
அத்தனையும் பார்த்திருப்பான்...

உலகம் பிறந்தது எனக்காக..
ஓடும் விமானங்கள் எனக்காக...
அமெரிக்காவில் வேலை
ஒன்று எனக்காக...
எனச் சொல்லும்
கனாக்களை நிஜமாக்கும்
சூட்சுமம் தெரிந்தவன்...

இரண்டாயிரத்து பதினொன்று..
ஜிஸிஇ வெள்ளி விழாவில்
இவனை சந்தித்தது...
இனி விரைவில்
இவனை சந்திக்கலாம்
எனும் ஆவலில்...

நண்பன் இரா.சுந்தரராஜன்
👍😀🌹🙏👏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (9-Oct-18, 6:46 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : tenralil oru puyal
பார்வை : 310

மேலே