மனமே மாற்றம் கொள்
பாழடைந்த குகையில்
சுற்றிலும் தூசு படிந்து
குப்பைகளின் கூடாரமாய்
குண்டும் குழி தடமாய்
சேறும் சகதியுமாய்
அருவருக்கும் அவலமாய்
ஒட்டடை ஓங்கி இருக்க
தன் நிலை
மரண நிலையை
மலர் தூவி வரவேற்றிருக்க ....
இக்குகையின் கூரை வழி
கொஞ்சம் பொத்தல் போட்டு
தேவ மகன் ஆசியினால்
மாய விதை ஒன்று
மங்கலமாய் வந்து விழுந்தது ....
அலங்கோலங்கள் புறந்தள்ளி
அற்புதமாய் மண்ணில் மயங்கியது ..
கொஞ்சம் துளிர் விட்டு
சிறுக சிறுக கிளையும் தொட்டது ...
பக்குவமாய் பக்கம் பக்கம்
பல துணை கிளைகள்
தோல் கொடுக்க
செம்மையாய் எழுந்து நின்றது ...
இன்றோ இம்மரக்கிளையில்
கூடு கட்டி
பல பறவைகள்
பரவசம் கொள்கிறது ...
மனமே மாற்றம் கொள்!
மாறும் எல்லாம்
பொறுமையோடு
புத்துயிர் கொள் .....!!