புரட்டாசி
கொடுக்கப்பட்ட தண்டனையில்
ஒருமாதம் தாமதம்
கோழிகளுக்கும் ஆடுகளுக்கும்....
கறிக்கடை கத்திகளுடனான
சமாதான உடன்படுக்கை ஒருமாதம்...
வேட்டையாடி உண்ட மனிதன்
வேண்டுதல் இருக்கிறான் ஒருமாதம்....
முழுமிருகமாய் மனிதன் மாறிவிடவில்லை
என்ற அகிம்சையின் அடையாளமோ
இந்த ஒருமாதம்....
இத்தனையும் தெரிந்து கொண்ட
கோழிகளும் ஆடுகளும்
யார் இவன் மனிதனா?
என்று ஏளனமாய் பார்க்கின்றன
இந்த ஒருமாதம்...
உண்மை என்னவோ....
மனிதனின் புரதசத்தை அதிகரிக்க
ஒருமாதம் புஷ்டியாய் வளர்கின்றன
கோழிகளும் ஆடுகளும்...