நெஞ்சுல காதல வச்சு
பல்லவி:
நெஞ்சுல காதல வச்சு, கொஞ்சி கொஞ்சிப் போறவளே
பஞ்சுல செஞ்ச சிலையே, காதலச் சொல்லிப் போயேன்டி
அஞ்சல அச்சம் ஏனோ, கிட்ட வந்து கட்டிக்கொள்ளு
யாராச்சும் குறுக்க வந்தா, காளையா மாறி முட்டித்தள்ளு
கெஞ்சல கெத்தாத் தானே, உன்னையக் கேக்க வந்தேன்டி
மஞ்சளப் போட்டுக் குளிச்சிட்டு, சாமியப் போல போறவளே ( நெஞ்சுல..)
சரணம் 1:
அன்னிக்கொரு நாளு, சிக்னல் ஒன்னு தந்த
என்னானு நான் கேட்டாக்க, விக்கலுனு சொன்ன
என்னிக்குமே நானு, உன்ன மட்டும் பாப்பேன்
நம்ம புதுக்காதல, மனசில் வச்சுக் காப்பேன்
புயலே வந்தாலும், பூகம்பம் வந்தாலும்
கொஞ்சூண்டும் கொறையாது, உம்மேல் உள்ள செல்லக்காதல்
கடலே மறிச்சாலும், உடல எரிச்சாலும்
இதயம் பறிச்சாலும், மாறாதம்மா இந்தக் காதல்
அடியே சிறுக்கி, ஐஸ்ஸான எங்கிறுக்கி (நெஞ்சுல..)
சரணம் 2:
உம்மனசு கரும்பே, நானும் ஒரு எறும்பே
கொஞ்சமாச்சும் விரும்பே, சம்மதிக்க திரும்பே
காதல் மெல்ல அரும்ப, செய்யேன் சின்னக் குறும்பே
கோட மழையாட்டம், தொடங்கட்டும் ஆட்டம் பாட்டம்
ஊரே எதித்தாலும், உறவுகள் தடுத்தாலும்
ஜெயித்தே தீருமடி, அழிவே இல்லா இந்தக்காதல்
சாதி பாக்கலையே, மதமும் பாக்கலையே
இதயம் பாத்துடுச்சு, வாழுமம்மா இந்தக் காதல்
அடியே கிறுக்கி, ஐஸ்ஸான எங்கிறுக்கி (நெஞ்சுல..)