வெளிநாட்டு வாழ்க்கை

வெளிநாட்டு வாழ்க்கை
——————————-
கொடிது கொடிது
ஏகாந்தம் கொடிது;
அதனினும் கொடிது
வெளிநாட்டில் தனிமை;
அதனினும் கொடிது
மனவழுத்தமெனுங் கொடுநோய்;
அதனினும் கொடிது
அயலறியாச் சுற்றம்;
அதனினும் கொடிது நாணி
அவர்தம்முதவி நாடுதல் தானே...
~ தமிழ்க்கிழவி(2015)

குறிப்பு:
ஒளவையின் தனிப்பாடல்களுள் ஒன்றால் கவரப்பட்டு, அவ்வுந்துதலால் தற்காலத்துக்கு இசைவாக்கித் தமிழ்க்கிழவி எழுதியது:).

எழுதியவர் : தமிழ்க்கிழவி (15-Oct-18, 4:03 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 2106

மேலே