காதல் வலி

நெஞ்சங்கண்ட காயத்திற்குப்
“பஞ்சு கொண்டு மருந்திட்டால்
கொஞ்சமேனும் வலித்திடுமோ?”
தயிரியமாய் முன் வந்து
உயிரிரு கண்வழி கலந்து
மயிலிறகால் மருந்திட்டாய்...
“செத்துப் பிழை” தினமுமெனக்
கத்தியதால் குத்தியதோர்
மெத்தவலி தந்திங்கே
சத்தமின்றி யெனைவிட்டுச்
சென்றதெங்கே...?
~தமிழ்க்கிழவி