எது நீ

எது நீ
என் உடல் இறங்கும்
காலைப் பனியா

சூரியன் எரிக்கும்
தகிக்கும் வெப்பமா

இதயத்தை வருடும்
மென் மயிலிறகா

நெஞ்சைத் தைக்கும்
நெருஞ்சி முள்ளா

முத்து இல்லா கொலுசின்
சத்தமில்லா அமைதியா

சலசலக்கும் ஓடையின்
நச்சரிப்பா


புவி

எழுதியவர் : (17-Oct-18, 5:12 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : ethu nee
பார்வை : 1258

மேலே