பிள்ளைப்பேறு எது சுகம்

பிள்ளைப்பேறு;
இயற்கை வழியா,
சிசேரியனா,
எது சுகம்!

ஒன்று பெறுவது,
ஒன்று பெறப்படுவது;
ஒன்று, தான் பெறுவது,
ஒன்று மருத்துவர், (சிசேரியன் வழி) பெறுவது;

ஒரு தாயார் சொல்லக் கேட்டேன்,
இது என்... பிள்ளை, நான்... பெற்றேன்,
என் துடை நடுங்கி..வலியைத்
தாங்கிப்..பெற்றேன்;

ஒன்று வலியைத் தாங்கிப் பெறுவது,
ஒன்று வலியின்றிப் பெறுவது;
சிசேரியன் வழி பிறப்பதைவிட,
தான் பிரசவிக்கிறதே பெரிய சுகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Oct-18, 10:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

மேலே