க்ராமத்துப் பெண்

நாளெல்லாம் பம்பரம்போல் சுழன்று
பணி, புரியும் இவள் , நித்தம் குளிப்பது
தானே கையால் இறைக்கும் கேணி நீர்
குளிக்கும் வேளையோ அதிகாலைப்பொழுது
முகத்தில் மஞ்சள் பூசி வாசமிகு மூலிகைகலந்த
மாவுதான் இவள் பூசிக்குளிக்கும் சோப்பு ...
கார்குழலாள் இவள் கூந்தலை ஆற்றி
பக்குவமாய்க்கட்டி பின்னிடுவாள்
பின்னே, வீட்டின் முன்னே பசுஞ் சாண நீரால்
தெளித்து, வண்ண கோலமிட்டு , வாயில்
தெரிந்த இறைவன் நாமம் இசைத்து
இல்லம் புகுந்து இறைவனை வணங்கி விட்டு
அடுக்களை புகுந்து விடுவாள் ................

அதற்க்கு முன்னே இவள் பித்தளைக்குடங்கள்
இவள் எடுத்துச் செல்வாள் ஆற்றங்கரைக்கு
அங்கு தெளிந்த தாமிரபரணி நீரால் நிரப்பி
லகுவாய் ஒரு குடத்தை இடுப்பிலும் மற்றோன்றை
தலையிலும் வைத்து அன்னம் இவள் நடந்துவரும் அழகு
கவிதைக்கும் அப்பால் இருப்பதோ..........

இப்படி நாள் முழுதும் சிட்டுக்குருவிபோல்
சுறுசுறுப்பாய் சுழன்று வரும் இவள்தான்
நான் மயங்கும் இந்தியா க்ராமத்துப் பெண்
தென்பாண்டிய நாட்டின் பைங்கிளி
சிற்பி செதுக்கா பொற்சிலை இவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Oct-18, 6:33 am)
பார்வை : 56

மேலே