வாழ்க்கை
திருமணமான முதல் கண்ணே
நீ வாரத்தில் பல நாட்கள்
இன்று வெள்ளி, நாளை சனி
அடுத்து சஷ்டி என்று கூறி
காதலுறவு ஒதுக்குவதேனோ
எனக்கு புரியலையே -நீ
என்னையே ஒதுக்குகின்றாயோ
தெரியலையே என்னவளே .......என்ற
என் கேள்விக்கு அவள் சொன்ன
அந்த ஒரே பதில் ஒரு வரியில்,
'இந்த உடலுறுவு ஒன்றே வாழ்வென்று
எண்ணினால் அது உன் தவறு'
இந்த பதில் என்னை அன்றே
அக்கணமே, அப்போதே மாற்றியது
இதோ, இன்று சஷ்டி .....விரதம்
நானும் அவளும் முருகனைத்தேடி
திருத்தணி சென்றுகொண்டிருக்கிறோம்
சிந்தித்தால் மனிதன்
சிந்தனை துறந்தால்
அவனும் மிருகமே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
