பெருசு

=======
மோட்டார் வாகனத்திலும்
சொகுசு மகிழுந்துகளிலும்
உல்லாசம் அனுபவிக்கும் பிள்ளைகளை
ஊரூராய் கால்வலிக்க
நடந்து நடந்தே உழைத்து
கரையேற்றி விட்டவர்தானின்று
“பெருசு” என்ற அடைமொழியுடன்
மூட்டுவலியென்று வீட்டுக்குள்
முடங்கிக் கிடக்கும் அந்த
பேர்போன தைல வியாபாரி.
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Oct-18, 1:51 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : perusu
பார்வை : 74

மேலே