மதங்களாம் நதிகள்

தேடுகிறேன்...
தேடுகிறேன்....
தெரிந்தால் சொல்..!

“அன்பே சிவம்”
எனுஞ் சைவமும்;
“உன்போல் உன் அயலானை நேசி”
எனுங் கிறிஸ்தவமும்;
“சுற்றமித்திரர் பால் அன்பும்
சற்றுங் குறையாப் பெருந்தன்மையும்”
வற்றாது வாழெனப் பெளத்தமும்;
“மனிதர்களிடம் அன்பு காட்டேல்,
அல்லாஹ் உனக்கன்பு காட்டார்”
எனும் இஸ்லாமும்;
எனதளவில், மனதறிய,
இறையாம் ஆழியதை
எய்திட ஓடும் பெருநதிகள்;

இங்கு....
எங்கிருக்கிறது பேதங்கள்?
தேடுகிறேன்....
தேடுகிறேன்....
வாடுகிறேன் பதில்காணா(மல்)!
தெரிந்தால் சொல்!!
~ தமிழ்க்கிழவி(2018)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (17-Oct-18, 7:30 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 639

மேலே