கலைவாணி வாழ்த்துப் பாட்டு

மாலினி,மாதங்கி, மதுசாலினி,நித்தியகல்யாணி
நான்முகன் தேவி,மாலின் மருமகளே வாணி,
வெண்பட்டுடுத்தி வெந்நதாமரையில் உரை கலைவாணி,
கள்ளமற்ற முனிவருக்கு வேதாம்சம் விளக்கி
அவர்கள் கருத்தில் எப்போதும் அமர்ந்ந்தவளே, சரஸ்வதி,
காளிதாசன் நாவில் எழுந்து 'சியாமளா தண்டகமாய்'
வெளிவந்து அந்த ஆட்டிடையனை ஆட்கொண்டாய் அன்னையே
கம்பனும், கூத்தனும் உனையே பாடி அந்தாதி எழுதி
உன்னருளால் மண்ணிலே மாபுலவராய் கீர்த்தியுடன்
வாழ்ந்து இன்றும் நம் உள்ளத்தில் வாழ்ந்திட
அருள் புரிந்தவளே , கலைகளெல்லாம் அள்ளி
தருபவளே, உனைப்போற்றும் வாசவன் நாவிலும்
எழுந்து வந்தருள் தர வேண்டுகிறேன் தாயே
தயைப் புரிவாய் அம்மா நீயே .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Oct-18, 8:23 am)
பார்வை : 69

மேலே