இரவல் வாழ்க்கை
துளி துளியாய்
கரைகின்ற ஞாபகமாய்
கண்ணீர் துளிகள்
வரி வரிக் கவிதையாய்
தொடர்கின்ற உவமைக்குள் உன் முகம்
நொடி நொடியாய் மரணிக்கின்ற வலிகள்
யாதும் உன் பெயரே
ரணம் ரணமாய்
துடி துடித்து வாழ்கிறேன்
வாழா மணித்துளியது மீண்டும் வேண்டும்...
ரா.அன்பரசு
ஆங்கில ஆசிரியர்,
கோவை மாவட்டம்.