அவள்-அவன்
என்னருகில் நீ இருந்தால்
என்னையே நான் மறக்கின்றேனே
பெண்ணே, என்றான் அவன்,
அதைக்கேட்டு அவள் 'நான்
தூர இருந்தாலும் கூட
நீ உன்னையே மறக்கின்றாயே
அது ஏன், என்று அவள் கேட்க,
அதற்கவன்,'அப்போதும் உன்னை
நான் அருகில் காண்பதால், அந்த
கோப்பைக்குள் உன்னை' என்றான்
இன்னும் சொல்வதற்கேதுமில்லை என்று
அவள் நகர்ந்துவிட்டாள்.................. இப்போது
அவன்........................
காண்பதிலெல்லாம் அவளைக் காண்கின்றானோ!
இப்படித்தான் சிலர் ஏமாற்றுகிறார்கள்
சில ஆண்கள், சில பெண்களை...........