நயனங்களின் மொழி புரிய வில்லையே
நயனங்களின் மொழி புரியவில்லையே
சொல்லில்லாத மெல்லிய கவிதையை
மெல்லிதழ் இடையே ஓடும் புன்னகையுடன்
மெல்லத் திறந்து மூடும் உன் விழிமொழியை
என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே
நயனங்களில் நீ பேசும் பாஷை புரியவில்லையே !