காதல்
என்னவளே என் இனிய காதலியே
இதோ உனக்காக இன்று உந்தன்
காதலன் நான் தரும் பரிசு -இந்த
அழகிய சிவப்பு ரோசா செண்டு
இதை நீ ஒருமுறை உன் காதருகே
வைத்துக் கேட்டுப்பார்,அதில் கேட்கும் ,
என் உயிர்நாடி உனக்காக , அது சொல்லும்,
எப்போதும் உனக்காக காத்திருப்பதாய் ....உந்தன்
சுவாசத்தில் கலந்து ஈருயிர் ஓருயிராய்
உண்ணின்று சுவாசிக்க ....,
காதலிக்கும் நம்மில் , 'நீ' யார்
'நான்' யார்...................... 'நாம்' என்று
நாமானபின்னே,
அன்று நீ சொன்னது இப்போது
என் நினைவில் எழுகிறதே,....என்னவளே,
நீ சொன்னாய்," அன்பே அன்பில் நீ
கடல், அதில் சங்கமித்துவிட்டேன் நான் நதியாய்
உன் அன்பாய் " என்றாயே .............
அதைத்தான், நான் இன்று உனக்கு
கூற நினைத்தேனடி , இந்த ரோசா செண்டாய்
என் மூச்சுக்காற்றாய் உன் சுவாசத்தோடு
இனைந்து சுவாசிக்க .....................