வாடி சட்டம்

இங்க வாடி, சட்டம்.

யாரை பாட்டிம்மா 'இங்க வாடி சட்டம்' ன்னு கூப்புடறீங்க. மரச் சட்டத்தையா? வழக்குரைஞர்கள் படித்த சட்டத்தைக் கூப்படறீங்களா?
நீங்க கூப்பிட்டா அந்தச் சட்டம் எல்லாம் வருமா?

காது நெறைய நகை போட்டுட்டு இருக்கற வங்கி அதிகாரியா இருக்கற எம் பேத்தியக் கூப்படறேன். அவ படிச்சு வேலைக்குப் போனதிலிருந்து பொட்டு வைக்கறதில்ல. மாராப்பும் போடறதில்ல.

யாரைச் சொல்லறீங்க? தாமரையவா?

அவ வடக்க பதிவு உயர்வு ஆகிப் போயிட்டு வந்ததுக்கப்பறம் 'தாமரை'யா இருந்தவ கம் (come) லா (law) ஆகிட்டாடி. அவள தாமரைன்னு கூப்பிட்டாக் கோவிச்சுக்கிறா. 'கம்லா'- ன்னுதான் கூப்படணுமாம். அவ தம்பியக் கேட்டேன். அவந்தான் சொன்னான்: 'கம்'னா 'வா' வாம். 'லா' -ன்னா 'சட்டம்'மாம்.

ஓ.... அதான் அவள 'வா சட்டம்' னு கூப்பிட்டீங்களா?

ஆமாண்டி வெண்ணிலா. 'தாமரை'ங்கற அருமையான பேரக் 'கம்லா'-ன்னு மாத்தி வச்சுட்டாளே. வடக்க போனா எல்லாம் மாறிப்போறாங்கடி. எந் தங்கச்சி பையன் நடராசன் நட்டுராசு (நட்ராஜ்)
ஆகிட்டாண்டீ.

எல்லாம் இந்திப் பேரு மோகத்தில இருக்கறாங்க பாட்டிம்மா. என்னதான் பேர மாத்தினாலும் இவுங்க இந்திக்காரங்க ஆகமுடியாது பாட்டிம்மா. இவுங்க மதிப்பை இவுங்களே கெடுத்துக்கறாங்க.

எல்லாத்துக்கும் திரை ரசனை தான் காரணம்.

எழுதியவர் : மலர் (24-Oct-18, 9:04 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 100

மேலே