எங்கிருந்து வந்தாய்

எங்கிருந்து வந்தாயோ
என்னை கவர்ந்து சென்றாயோ
புரியாத உறவின் அர்த்தமானாய் வந்து
மனதின் மன்னவனானாயோ..
திடீரென மின்னும்
மின்மினிப்பூச்சீ போல
நீ தோன்றினாய்.
வாழ்வில் ஒளி தந்தாய்
வசந்தமாய் சிறகடித்தாய்..
ஒரே பார்வையால்
ஒரே வார்த்தையால்
ஒரே புன்னகையால்
ஓராயிரம் காதல் மொழி
பேசினாய்..
கண்ட ஒரே நொடியில்
உன் இதயவரையில்
என்னை ராணியாக்கினாய்
உன்னை மறந்து என்னை
நினைத்தாய்...
காதல் எதையும்
கடந்து போகுமென உன்
கண்கள் சத்தியம் செய்தன
காதலுடன் காலமெல்லாம்
கலந்திருப்பதாக...
உன் வருகை
வேண்டுமென காத்திருக்கிறது
ஜீவன்..
இதயவரையில் உனக்கென
சிம்மாசனம் அமைத்துக்கொண்டு..