கை முறுக்கு
கை முறுக்கு வைக்கப்பட்டிருந்தது
காட்சிப் பொருளாய் தீபாவளி கண்காட்சியில்
செய்முறையை விளக்கிய பாட்டியுடன்
செல்பி எடுத்தனர் மக்கள்
பாட்டியின் பேச்சு மீடியாக்களில்
பக்கம் பக்கமா பல் டாக்டர்
பாதி பேருக்கு பல்லுல கவசம்
பல்லால் முறுக்கு நொருங்கிய காலம் போய்
முறுக்கால் பல் நொருங்கத் தொடங்கியவுடன்
அரசாங்கத்தின் அவசர நடவடிக்கை
அனைத்து முறுக்குக் கடைகளையும் மூடி
அழைத்து வந்தது எனை இங்கே
அனைவரும் வந்து பார்த்து
ஆதரவு தாரீர் முறுக்கு கண்காட்சிக்கு