சச்சன்

தம்பி, நீங்க நாலும் தெரிஞ்சவரு. எதைச் செய்யறதுன்னாலும் மேல இருக்கறவங்கிட்ட கேட்டுட்டுச் செய்யறவரு. எம் பேரனுக்கு ஒரு நல்ல இந்திப் பேராச் சொல்லுங்க.

என்னங்க பாட்டிம்மா, தமிழ்ப் பேரு உங்களுக்குப் பிடிக்காதா?

தம்பி, தமிழ் சனங்க பெத்த பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேருங்கள வைக்கறத மறந்து அம்பது வருசம் ஆகுது. ஒரு கொழந்தைக்கு தமிழ்ப் பேர வச்சா தமிழாசிரியர்களே அந்தப் பேரக் கிண்டல் பண்ணுவாங்க. சரி. உங்களுக்குப் பிடிச்ச பேரா எம் பேரனுக்கு வையுங்க தம்பி.

சரிங்க பாட்டிம்மா. நீங்க ஆசைப்படறீங்க. ஒரு ரண்டு நிமிசம் தியானம் பண்ணி மேல இருக்கறவங்கிட்ட கேக்கறேன். அவன் சொல்லறான். நான் அந்தப்.பேர உங்க பேரனுக்கு வைக்கிறேன்.
(இரண்டு நிமிடம் கழித்து)
பாட்டிம்மா, உங்க பேரனுக்கு 'சஜ்ஜன்'னு பேரு வைக்கிறேன்.

'சச்சன்'னா? சண்டை சச்சரவுக்குப் போகாம எஞ் செல்ல 'சச்சன்' வளந்தா சரி தம்பி.

நீங்க பயப்படாதீங்க பாட்டிம்மா, 'சஜ்ஜன்'னா 'நல்ல மனிதன்'னு அர்த்தம்.

ரொம்ப அருமையான அர்த்தம் தம்பி.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■◆
Sajjan = good man

எழுதியவர் : மலர் (28-Oct-18, 4:53 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 43

சிறந்த நகைச்சுவைகள்

மேலே