கண்ணீர்

மகிழ்ச்சிக்குள்
துக்கத்தை
யார் வைத்தது?

ஆனந்தத்தில்
கண்ணீர் கசியலாமா?

உனைப் பார்க்கும் போதெல்லாம்

மழலை கண்டதும்
பால் சுரக்கும்
முலை போல

என் கண்ணில்
ஈரம் கசிகிறதே!
புவி

எழுதியவர் : புவி (29-Oct-18, 9:33 am)
சேர்த்தது : அகிலா
Tanglish : kanneer
பார்வை : 102

மேலே