“குற்றமா – ஒரு பக்க கதை

அலைபேசியின் அழைப்பின் குரலைக் கேட்டதும் அதிர்ச்சியில் ஆனந்த கண்ணீர் சுஜாவின் அழகான கன்னங்களில் வழிந்தோடியது.
துடைத்து கொண்டவாறே ”சொல்லுங்க ”டைரக்டர் ஸார் !”
”மிஸ் சுஜா! நான் பன்ற படத்துல நீங்கதான் உறீரோயின். ஒங்க கேரக்டர் பத்தி ஸ்டோரி டிஸ்கஸன் இருக்கு ஓட்டல் கவிதாவுக்கு வந்துடுங்க”
”மிஸ் சுஜா! நீங்க சினிமா பீல்டுல வர்றதுக்கு எப்படியெல்லாம் கஷ்டப்பட்டீங்க! என்ன மாதிரியெல்லாம் அட்ஜஸ்ட் செய்தீங்க இத சொல்றதுதான் ஒங்க கேரக்டர் ஓ.கே-வா?”
”ஓ.கே ஸார்! எனக்கு துணைநடிகையான எனக்கு உறீரோயினா சான்ஸ் கொடுத்த தற்கு நன்றி சார்”
”ஏம்மா சுஜா ரிகல்சலுக்கு ஸ்டார் ஸ்டுடியோவுக்கு வந்துடும்மா..கம்பெனி கார் அனுப்பறேன்”
”ரிகல்சலின் போது ”மிஸ் சுஜா இப்படி நடிக்கணும். அப்படி நடிக்கணும் ஒவ்வொரு ஷாட்டா சொல்லி கொடுக்க கற்பூரமாய் பிடித்து கொண்டாள் சுஜா!
படம் நிறைவடைந்தவுடன் ”சுஜாவே எதிர்பாராத தொகை செக் வடிவில் டைரக்டர் வாங்கி தந்தவுடன் ””ஸார்! நீங்கதான் டிதய்வம் ஒங்கள வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் டைரக்டர் கையை இறுக்கி பிடித்து கண்ணீர் மல்க நன்றி சொன்னாள்.
“நல்ல நடிகையை உருவாக்கி விட்டோம்! படமும் சக்ஸ்ஸ்” பெருமித த்துடன் அன்றிரவு தூங்க போகும் முன்பு … தொலைக்காட்சிகளில் ”பிரபல டைரக்டர் மீது பாலியல் புகார் குற்றம் சுமத்தினார் நடிகை சுஜா” என்று செய்தி பரபரப்பாக ஓடியது.
”டைரக்டர் துணை நடிகைக்கு உறீரோயின் வாய்ப்பு கொடுத்த து குற்றமா? இல்லை நடிக்க சொல்லி கொடுத்த து குற்றமா? குழப்பத்தில்… நிம்மதியையும் தூக்கத்தையும் இழந்தார் பிரபல டைரக்டர்.

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (29-Oct-18, 10:40 pm)
சேர்த்தது : கேஅசோகன்
பார்வை : 228

மேலே