நினைவுகள் தந்த சுகம்

தூக்கம் தொலைத்த இரவுகளில்
நினைவலைகள் நெஞ்சத்தில் மோதியதும்
கறையெங்கும் நுரையாய் மங்கை முகம்...
அவள் நினைவுகளின் பிடியில்
சிக்கித் தவிக்கும்
என் விழிகளுக்கு
ஒவ்வொரு இரவும்
ஒரு யுகம்..
தூக்கமே தொலைந்த போதிலும்
கனவுகளுக்காக காத்திருக்கும்
கண்களுக்கு இதிலென்ன புது சுகம்...!!!

எழுதியவர் : இசக்கிராஜா (30-Oct-18, 2:50 pm)
சேர்த்தது : இசக்கிராஜா
பார்வை : 775

மேலே