அயல் நாட்டு பயணம்
குஷியாய் குதுகளிக்க பயணிக்கவில்லை
குலம் பெருமை அடையவும் பயணமில்லை
குழந்தையின் குற்றுயிர் காக்கவும்
குலமாந்தர் பசியை போக்கவுமானது
அழகான ஊரை விட்டு
ஆர்ப்பரிக்கும் ஆற்றை மறந்து
அங்கலாய்க்கும் பங்காளியைத் துறந்து
அத்தானை அழைக்கும் அத்தை மகளை கடந்து
அதிகாரம் செய்யும் அப்பனை இழந்து
அம்மாவின் அஞ்சறைப் பெட்டியின்
சேமிப்பின் துணையோடு
தூக்கி எறியப் பட்ட தூண்டில்
புழுவைப் போன்றது - இத்
தூரத்தேசப் பயணம் ....